.webp)
Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச்செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ஆனந்தன்’ என அழைக்கப்படும் பிரதான சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சிலர் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச்செல்வதற்கு உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மேலும் 04 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனியவிலிருந்து கார் மூலம் வடக்குக்கு சென்ற இஷாரா செவ்வந்தி, 03 நாட்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள 03 வீடுகளில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.