.webp)
Colombo (News 1st) அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் அனைத்து ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்களையும் இலங்கையில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை சிரச ஊடக வலையமைப்பு பெற்றுள்ளது.
இலங்கையில் மகளிருக்கான கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு, இலங்கை மகளிர் கிரிக்கெட்டிற்கான பாரிய முதலீடாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை சிரச ஊடக வலையமைப்பு பெற்றுள்ளது.
இதற்கமைய 2025ஆம் ஆண்டில் ஆடவருக்கான 20 க்கு 20 ஆசிய கிரிக்கெட் தொடர், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், ஆடவர் மற்றும் மகளிர் வளர்முக அணிகளுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், ஆசிய கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் ஆகியன நடைபெறவுள்ளன.
2026ஆம் ஆண்டின் மகளிருக்கான 20 க்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தொடர் ஆகியனவும்
2027 ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் தொடர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர், மகளிர் வளர்முக அணிகளுக்கிடையிலான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் ஆகியனவும்
எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண 20 க்கு 20 கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ உள்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தையும் சிரச ஊடக வலையமைப்பு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.