.webp)
Colombo (News 1st) பங்களாதேஷை வெற்றிகொண்டு ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
நேற்று(24) நடைபெற்ற சுப்பர் 4 சுற்றில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றியீட்டியது.
169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் Abhishek Sharma 75 ஓட்டங்களைப் பெற்றதுடன், Hardik Pandya 38 ஓட்டங்களுடன் வௌியேறினார்.
20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சுப்பர் 04 சுற்றின் 02 போட்டிகளையும் வெற்றிகொண்ட இந்திய அணி மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
புள்ளிகள் பட்டியில் இறுதியிலுள்ள இலங்கை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.