.webp)
Colombo (News 1st) வென்னப்புவ பொலிஸ் நிலையத்தை அண்மித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மேல் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து வௌியேறும் சந்தர்ப்பத்தில் காரில் பயணித்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.