குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

08 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

by Staff Writer 14-09-2025 | 8:47 AM

Colombo (News 1st) எட்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்த இந்திய பிரஜை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

நேற்று(13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர், இந்தியாவின் மதுரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த இந்திய பிரஜையின் பயணப்பை சந்தேகத்திற்கிடமானது என குறிப்பிட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள், சோதனையிட்ட போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று(14) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்