IMF 5ஆவது கடன் தவணைக்கு அனுமதி

IMF 4ஆவது மீளாய்வு நிறைவு: ஐந்தாவது கடன் தவணைக்கு அனுமதி

by Staff Writer 01-07-2025 | 10:35 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது தவணையை வழங்க அதன் நிறைவேற்றுக்குழு ​அனுமதி வழங்கியது.

நான்காவது மீளாய்வை நிறைவு செய்து சர்வதேச நாணய நிதியம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மேலும் 350 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது.