7ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் யாழ்ப்பாணம் Fox Resorts

by Staff Writer 22-06-2025 | 8:04 PM

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் கீழ் செயற்படுகின்ற யாழ்ப்பாணம் Fox Resorts ஏழாவது ஆண்டு பூர்த்தியை இன்று(22) கொண்டாடுகின்றது.

யாழ்.கொக்குவிலிலுள்ள Fox Resorts சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்ற அனைத்து வசதிகளையும் கொண்ட ஹோட்டல் கட்டமைப்பாக இது திகழ்கின்றது.

இயற்கை சூழல், நீச்சல் தடாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்ட Fox Resorts யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து உணவு வகைகளையும் தனித்துவமாக பெற்றுக்கொள்ளக்கூடிய ஹோட்டலாகவும் விளங்குகின்றது.

Fox Resorts-இன் 7ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விழாவில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் ஸ்ரீநிவாசன், Fox Resorts-இன் பிரதம நிறைவேற்று அதிகாரி Chris Quyn, யாழ்ப்பாணம் Fox Resorts ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.