கடந்த 5 நாட்களில் 6,014 இந்திய சுற்றுலா பயணிகள்

கடந்த 5 நாட்களில் 6,014 இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 12-06-2025 | 12:23 PM

Colombo (News 1st) கடந்த 5 நாட்களில் 6,014 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 28.2 வீதமானோர் இந்திய பிரஜைகள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 210,074ஆக பதிவாகியுள்ளது.