நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

by Staff Writer 10-05-2025 | 7:51 PM

Colombo(News1st) நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு மாநிலமான இமோவில் இந்தத் தாக்குதல் நடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல்தாரிகள்  20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு  தீ வைத்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியொருவர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.