NPPக்கு எதிரான குழுக்களுடன் செயற்பட தீர்மானம் -UNP

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் - ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

by Staff Writer 15-05-2025 | 8:01 AM

Colombo (News 1st) தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வௌியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(14) நடைபெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நலீன் பண்டார கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலுள்ள பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பெயர்ப்பட்டியலை தயாரிப்பதற்காக குறித்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று(15) சந்திக்கவுள்ளனர்.