.webp)
கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் இருந்து சம்பவம் தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்தார்.
பாடசாலைகளின் நற்பெயரைப் பாதுகாப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படாமலிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளைக் குறைப்பதற்காக துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் தௌிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்தார்.
பாடசாலைகளுக்குள் ஏதேனும் துஷ்பிரயோகம் இடம்பெற்றால் அதிபர் அல்லது பொறுப்பான தரப்பினரால் உடனடியாக 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு சேவை மூலமாகவோ அல்லது இலக்கம் 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுர என்ற முகவரியில் உள்ள தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையிலோ முறைப்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகம் தொடர்பான குற்றஞ்சாட்டப்பட்ட அதிபர் அல்லது ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர்கள் பிள்ளைகளுடன்