தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

by Staff Writer 27-03-2025 | 3:07 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் ஏப்ரல் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் ஏப்ரல் 7ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, பூநகரி, மன்னார், தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வாக்கெடுப்பு மே 6ஆம் திகதி நடத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.