.webp)
Colombo (News1st)அம்பாறை இங்கினியாகல பகுதியில் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகர் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமோடா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இலங்கையின் நன்னீர் மீன்பிடித் தொழிலை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி அமைப்பின் நிதி உதவியின் கீழ் இகினியாகல மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
இதன்போது மீன்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பவுசர்களை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.