.webp)
Colombo (News 1st) தங்குவதற்கு இடமின்றி துன்பத்தில் வாழ்ந்த குடும்பத்திற்கு கம்மெத்த இன்று ஆறுதலளித்தது.
இந்த வீட்டிலேயே ஊவபரணகம ரன்ஹவடியகமவில் வசிக்கும் ஈ.டீ.சைமன் மற்றும் பேபினோனா வாழ்ந்து வருகின்றனர்.
2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வரும் சைமன் மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கை அவரது மகன்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டதையடுத்து மிகவும் கடினமானது.
அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு நடத்தும்போது தங்குவதற்கு இடமின்றி இருப்பது பாரிய பிரச்சினையாக இருந்தது.
இந்த செய்தியை பதுளை செய்தியாளர் லுஷாந்த ரத்நாயக்க அறிவித்ததன் பின்னர், பொரளையில் வசிக்கும் மந்திரீ அமரசிங்க புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான பூரண அனுசரணை வழங்க முன்வந்தார்.
அவரது முழுமையான ஒத்துழைப்புடன் புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஊவபரணகம உதவி பிரதேச செயலாளர் பீ.எல் கயானி கீத்திகா, அம்பகஸ்தோவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.கே.ரத்நாயக்க, ஊவபரணகம பிரதேச சபையின் செயலாளர் எம்.என்.பி.மெனிக்கே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அத்துகோரள உள்ளிட்ட கம்மெத்த குழுவினர் சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர்.
பதுளையின் ரன்ஹவடிகமவில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட இந்த மனிதநேயம் உலகுக்கு சிறந்த கதையை கூறுகிறது.
கம்மெத்த
நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரண்...