.webp)
Colombo (News 1st) இலங்கையின் புகழ்பூத்த மூத்த சிவாச்சாரியார்களில் ஒருவரான ளின் இறுதிக்கிரியை இன்று(26) நடைபெற்றது.
சிவாகம கலாநிதி தாணு மகாதேவ குருக்கள் தனது 88ஆவது வயதில் நேற்று சிவபதமடைந்தார்.
யாழ்.இணுவிலில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.
கிரியைகளை அடுத்து இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் அன்னாரின் புகழுடல் இன்று மாலை தீயில் சங்கமமானது.
யாழ்.இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபராக சிவஸ்ரீ தாணு மகாதேவ குருக்கள் இலங்கையில் பல சிவாச்சாரியார்களை உருவாக்கிய பெருந்தகையாக போற்றப்படுகிறார்.
தாணு மகாதேவ குருக்களின் இறைபணியை பாராட்டி இந்தியாவின் தருமை ஆதீனம் சிவாகம கலாநிதி என்ற சிறப்புடன் கௌரவம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.