வர்த்தகரின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

வர்த்தகரின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

by Chandrasekaram Chandravadani 17-03-2025 | 3:27 PM

Colombo (News 1st) மிதிகம, பாதேகம பகுதியில் வர்த்தகரொருவரின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று(17) அதிகாலை 2.30 அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வர்த்தகருக்கோ வீட்டில் இருந்த எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லை.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.