.webp)
Colombo (News 1st) சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா சாம்பியனானது.
துபாயில் நடைபெற்ற இறுதிப் பொட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
போட்டியில் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
வில் யங் மற்றும் ரசின் ரவிந்திரா ஜோடி ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.
இவரும் ஆரம்ப விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை பெற்றனர்.
வில் யங் 15 ஓட்டங்களை பெற்றார்.
வேகமாக ஆடிய ரசின் ரவிந்திர 29 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றார்.
இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் நியூஸிலாந்தின் முதல் 3 விக்கெட்களும் 75 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.
முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களையும் டொம் லதம் 14 ஓட்டங்களையும் சிறப்பாக ஆடிய டெரில் மிசெல் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
வருன் சக்கரவர்த்தி மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூஸிலாந்து 251 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா சார்பில் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 105 ஓட்டங்களை பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
சுப்மன் கில் 31 ஓட்டங்களை பெற்றார்.
விராட் கோலி ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 4 பவுன்டரிகள், 3 சிக்சர்கள் அடங்களாக 76 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணியின் முதல் 3 விக்கெட்களும் 122 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.