அங்கத்தவர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை

by Staff Writer 05-02-2025 | 3:15 PM

Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும் என தொழில் ஆணையாளர் நாயகம் H.K.K.A.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்காக 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.