மொரேதோட்ட மாணவர்களுக்கு கம்மெத்தவினால் நூலகம்

பதுளை மொரேதோட்ட மகா வித்தியாலயத்திற்கான நூலகத்தை நிர்மாணிக்கும் கம்மெத்த

by Staff Writer 04-02-2025 | 4:08 PM

Colombo (News 1st) 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பதுளை மொரேதோட்ட மகா வித்தியாலயத்தின் புதிய நூலக கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக இன்று(04) அடிக்கல் நாட்டப்பட்டது.

இது கம்மெத்தவின் மற்றுமொரு செயற்றிட்டமாகும்.

பதுளை - ஹாலிஎல கல்வி வலயத்திற்குற்பட்ட மொரேதோட்ட மகா வித்தியாலயத்தில் 122 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்த பாடசாலையின் பிரதான குறைபாடு நூலகத்திற்காக கட்டடமொன்று காணப்படாமையாகும்.

இந்த பிரச்சினையை அடையாளம் கண்ட கம்மெத்த குழாத்தினர், இன்று பாடசாலை வளாகத்தில் நூலக கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.

இதற்கான நிதி அனுசரணையை பசன் தெவினி ஞாபகார்த்த மன்றம் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் ஹாலிஎல பிரதேச செயலாளர், பதுளை வலயக் கல்வி பணிப்பாளர், பசன் தெவினி ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளரும் கம்மெத்த தலைவருமான ஷெவான் டெனியல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.