கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 15-01-2025 | 12:06 PM

Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதிக்குள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பிற்கு நீரை விநியோகிக்கும் பிரதான நீர்வழங்கல் வலையமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகளுக்காக நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.