சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி

சீனாவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

by Staff Writer 14-01-2025 | 2:08 PM

Colombo (News 1st) நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீனாவை அந்நாட்டு நேரப்படி இன்று(14) காலை 10.25 அளவில் சென்றடைந்தார்.

சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் ஷியாடோங் ஜனாதிபதியை வரவேற்றார்.

அதன் பின்னர் சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதி Xi Jinping-இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.