வாக்குச்சீட்டு விநியோகம் செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

வாக்குச்சீட்டு விநியோகம் செவ்வாய்க்கிழமை ஆரம்பம் - தபால் திணைக்களம்

by Staff Writer 31-08-2024 | 6:34 PM

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு சுமார் 8000 பேரை பணியில் அமர்த்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி காலையிலிருந்து தபால் ஊழியர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை உரிய முகவரிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கு தபால் திணைக்களத்திற்கு உரித்தான வாகனங்களும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

விசேட பாதுகாப்புடன் வாக்குச்சீட்டுகள் கொண்டு செல்லப்படவுள்ளன.

எதிர்வரும் 03 ஆம் திகதியிலிருந்து உரிய தபால் அலுவலகங்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என  சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.