Colombo (News 1st) நாட்டில் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6286 கார்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குதல் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன இறக்குமதிக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, பாகங்களைப் பொருத்தி விற்பனை செய்யும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.