கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மீண்டும் தெரிவு

IMF-இன் முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மீண்டும் தெரிவு

by Bella Dalima 13-04-2024 | 3:22 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அடுத்த 5 வருட பதவிக் காலத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு ஜோர்ஜிவா மாத்திரமே விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் இரண்டாவது தடவையாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக கிறிஸ்டலின் ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.