.webp)
Colombo (News 1st) இந்து சமுத்திரத்தில் ஈரான் போர் கப்பலை மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்ததாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் இருப்பது பாதுகாப்பானதென நினைத்துக்கொண்டிருந்த ஈரான் போர் கப்பலை அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகின்றார்.
நீர்மூழ்கி கப்பல் நடத்திய Torpedo தாக்குதலில் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
