விமானப் பயணச்சீட்டு விலையை அதிகரிக்க நடவடிக்கை

விமான எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக நாட்டின் விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 13-03-2026 | 5:10 PM

COLOMBO (News1st) விமான எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக நாட்டின் விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு

 தெரிவித்தார். 

இயலுமான வரையில் விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணங்களை குறைந்த மட்டத்திலேயே பேணுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,  விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு கூறினார். 

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமையினால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார குறிப்பிட்டார். 

கடந்த 27 ஆம் திகதி 93.57 அமெரிக்க டொலராக காணப்பட்ட ஒரு பீப்பாய் விமான எரிபொருள், 209 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

உலக சந்தை விலையேற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் விமானங்களுக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.