இருவேறு இடங்களில் இருந்து 2 சடலங்கள் மீட்பு

by Staff Writer 12-02-2024 | 6:10 PM

Colombo (News 1st) அம்பாறை - பெரியநீலாவணை, பாண்டிருப்பு கடற்கரையில் அடையாளந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெரியநீலாவணை - பாண்டிருப்பு  கடற்கரை பகுதியில் இன்று(12) காலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கி, மீண்டும் கடலுக்கு அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை - அக்கரகந்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் இன்று(12) மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற லிந்துலை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அக்கரகந்த தோட்டத்தை 3 பிள்ளைகளின் தாய் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.