Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்தது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி கிண்ணத்தை தனதாக்கியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.