மழையுடனான வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

மழையுடனான வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 26-11-2024 | 2:47 PM

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை அண்மித்த பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையே இதற்கான காரணமாகும்.

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று(25) காலை 8.30 முதல் இன்று(26) அதிகாலை 4.15 வரை அம்பாறை லாகுகல பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன் அளவு 191 மில்லிமீட்டர் ஆகும்.

அம்பாறை மகாஓயா பிரதேசத்தில் 149.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேநேரம் தமண பகுதியில் 147 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.