Colombo (News 1st) பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை தென் கொரியாவின் புசான் நகரில் இன்று(25) ஆரம்பமாகியுள்ளது.
அதிகரித்துவரும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை குறைப்பதற்காக ஒவ்வொரு நாட்டினதும் நிலைமைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 353 மில்லியன் தொன்னாக அதிகரித்துள்ளது.