Colombo (News 1st) ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கமைய தேர்தல் முடிவுகள் நேற்று(23) அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.