உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு நினைவூட்டல்

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்

by Staff Writer 18-10-2024 | 9:18 AM

Colombo (News 1st) அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டண நிலுவைகள் அனைத்தையும் செலுத்தியதன் பின்னரே குறித்த இல்லங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டதன் பின்னரே உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பொறுப்பேற்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சின் அறிவிப்பை தொடர்ச்சியாக பொருட்படுத்தாமல் செயற்படும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.