Colombo (News1st) பெரும்போகத்திற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நீரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கன்னொருவையில் அமைந்துள்ள விவசாய திணைக்கத்தில் இன்று(01) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் எம்.பி.எம் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளன.
இம்முறை பெரும்போகத்தில் 800,000 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பெரும்போக நெற்செய்கைக்கு போதுமான நீர் கொள்ளளவு காணப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.எம் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.