Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தபால் மூல விண்ணப்பங்களின் ஒருபகுதி தேர்தல் ஆணைக்குழுவிடம் நேற்று(29) கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய விண்ணப்பங்கள் இன்று(30) கையளிக்கப்படவுள்ளன.
இதனிடையே, 2024 பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை(01) ஆரம்பமாகவுள்ளது.