இலங்கை மீனவர்கள் படகு விபத்து

இலங்கை மீனவர்கள் 05 பேருடன் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்து

by Rajalingam Thrisanno 30-09-2024 | 10:41 AM

Colombo (News 1st)

இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று  சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 05 இலங்கை மீனவர்களும்  மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ''ரன்முத்து துவ 10" எனும் மீன்பிடிப் படகில் கடந்த 12 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும் அந்த படகு கடந்த 26ஆம் திகதி விபத்துக்குள்ளானதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான படகு தற்போது இந்திய கடற்பரப்பில் மிதந்து கொண்டு இருப்பதாக படகின் உரிமையாளருக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகில் இருக்கும் மீனவர்களுக்கு  உதவுவதற்காக மற்றுமொரு படகை அனுப்பியுள்ளதாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இலங்கை கடற்படை மற்றும் வௌிவிவகார அமைச்சின் ஊடாக இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியது.