Colombo (News 1st) வௌ்ள அபாயம் காரணமாக வியட்நாமின் தலைநகர் ஹனோயிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
வியட்நாமின் சிவப்பு நதிக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அண்மையில் வியட்னாமை தாக்கிய Yagi சூறாவளி காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 பேர் காணமல் போயுள்ளனர்.
அனர்த்த நிலைமை காரணமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த வருடத்தில் ஆசியாவை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளியாக Yagi பதிவாகியுள்ளது.