Colombo (News 1st) பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி ஆகியவற்றை கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதி பண்டங்களை விடுவித்து, சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் கட்டமைப்பை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.