ICC தலைவராக ஜெய் ஷா தெரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக ஜெய் ஷா தெரிவு

by Staff Writer 27-08-2024 | 10:10 PM

Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ICC) தலைவராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் பதவியேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.