பெரிஸ் ஒலிம்பிக் விழா நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவரும் நிலையில் அது சார்ந்த சுவாரஷ்ய தகவல்களும் அவ்வப்போது இணையத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.
அப்படி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள ஒரு நிழற்படமே இது.
இலக்கிற்கு குறிபார்த்து சுடும் போட்டியில் யூசுப் டிகெக் (Yusuf Dikec) எனும் 51 வயதுடைய துருக்கி வீரரின் ஆற்றலை இந்த நிழற்படம் பரைசாற்றுகின்றது.
10 மீற்றர் தூரம்கொண்ட கலப்பு பிரிவு போட்டியில் அவர் தனது திறமையை வௌிப்படுத்தி வௌ்ளிப்பதக்கம் வென்றார்.
போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு போட்டியிட யூசுப் டிகெக் (Yusuf Dikec) சாதாரணமாக பங்குபற்றியமைதான் இதன் சுவாரஷ்யமாகும்.
ஒரு கையை காற்சட்டை பையில் ஸ்டைலாக வைத்துக்கொண்டு மற்றைய கையில் துப்பாக்கியை ஏந்தி சாதாரணமாக போட்டியில் யூசுப் டிகெக் (Yusuf Dikec) வௌ்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதன் காரணமாகவே இவரது இந்த நிழற்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளதுடன் பலரும் அவரது ஆற்றலை வியந்து பாராட்டிவருகின்றனர்.
இந்தப் போட்டியில் சேர்பிய ஜோடி தங்கப்பதக்கத்தையும் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.
யூசுப் டிகெக்கிற்து (Yusuf Dikec) இது 5ஆவது ஒலிம்பிக் விழா என்பதுடன் அவர் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பதும் சிறப்பம்சமாகும்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான யூசுப் டிகெக் (Yusuf Dikec) விளையாட்டுத்துறை விஞ்ஞானத்தில் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.