Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் மிக்கவொரு தருணத்தில் நாடு இருப்பதால், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை நேசிக்கும் ஒருவராக தன்னால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியவுடன், மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் ஒன்றினைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.