எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இராஜகிரியவிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று(31) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரே கட்டுப்பணத்தை செலுத்தினர்.
இதற்கமைய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 5 பேர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.