பிரித்தானிய பிரதமரின் புதிய அமைச்சரவை

பிரித்தானிய பிரதமரின் புதிய அமைச்சரவையில் அதிக பெண் பிரதிநிதிகள்

by Staff Writer 06-07-2024 | 3:15 PM

பிரித்தானியாவின் புதிய பிரதமரான கியர் ஸ்டாமர் தமது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். 

அதற்கமைய பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சராக ரேச்சல் ரீவெஸ் (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளார்.

45 வயதுடைய அவர், பொருளியலில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

பிரித்தானியாவின் துணை பிரதமராக  Angela Rayner நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் பிரித்தானிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

பக்கிங்ஹம் அரண்மனையில் மன்னரைச் சந்தித்து உரையாடிய பின்னர் அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தலைமையில்  பிரித்தானிய வரலாற்றில் அதிகளவான பெண்  அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டாமர்  தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த 89 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.