Colombo (News 1st) தென்கொரியாவின் Bucheon நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
9 மாடிகளை கொண்ட குறித்த கட்டடம் 2003ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக Bucheon தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.