ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன்

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவான மசூத் பெசெஸ்கியன்

by Staff Writer 06-07-2024 | 3:05 PM

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஈரான் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் 53.3 வீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார். 

71 வயதான  மசூத் பெசெஸ்கியன் இருதய சத்திரசிகிச்சை நிபுணராவார்.

ஈரானின் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்ட மசூத் பெசெஸ்கியானும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயீத் ஜலிலியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர்.

எவ்வாறாயினும், கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளராளும்  50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியவில்லை.

ஈரானிய வாக்காளர்களில் 60 சவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்ததாகவும் தகவல்கள் வௌியாகின.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி  இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.