குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம்

Sierra Leone-இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம்

by Staff Writer 03-07-2024 | 3:19 PM

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான Sierra Leone-இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பலரும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். 

முதல் பெண்மணி Fatima Bio-இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்டமூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி Julius Maada Bio ​கையெழுத்திட்டுள்ளார். 

இந்த சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்யும் ஒருவருக்கு 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 4,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.