Colombo (News 1st) தமிழ்நாட்டில் கவரப்பேட்டையில் பயணிகள் ரயிலொன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானத்தில் 19 பேர் படுகாயமடைந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் இடம்பெறவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மைசூரிலிருந்து தர்பங்காவுக்கு பயணித்த ரயிலே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டுள்ளதுடன் 2 ரயில் பெட்டிகளில் தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் உணவு மற்றும் மாற்று போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.