.webp)
Colombo (News 1st) சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில் அவரது இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்பை வழங்குவதற்கான நேரம் இதுவென தெரிவித்து இவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியன் மகுடத்தை 17 ஆண்டுகளின் பின்னர் இந்தியா தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.