மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 20-06-2024 | 12:03 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடி, அப்றார் குறுக்குவீதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி 6-ஐ சேர்ந்த 43 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதியதில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.