இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

by Bella Dalima 20-06-2024 | 3:26 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இன்று (20) மீண்டும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறினார்.

இந்த வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.