.webp)
ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கின்றது.
கொழும்பிலுள்ள 2 ரயில்வே பணிமனைகளில் இருந்து ரயில்கள் இயக்கப்படவில்லையென லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பளம் வழங்கப்படாமை, பதவி உயர்வின்மை, ஆட்சேர்ப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கிராமிய வீதிகள், கிராமிய பாலங்கள் அமைப்பதில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகி இருப்பதாக சங்கத்தின் உப தலைவர் நிலந்த விஜேசேன தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 37ஆவது நாளாகவும் தொடர்கிறது.